மனித இயல்புகளைப் பதிவு செய்யும் கதைகள்
நன்மாறன் கோட்டை கதை – அ.இருதயராஜ்
”நன்மாறன்கோட்டைக்கதை”.மனிதவாழ்வில்குவிந்துகிடக்கும்எண்ணற்றஉணா்வுகளையும், விடைதேடமுடியாதகேள்விகளையும்,
வலியும்வஞ்சகமும்நிறைந்தமனநிலைகளையும்நன்குபடம்பிடித்துக்காட்டுகின்றன. மனிதா்கள்அன்றாடவாழ்வில்சந்திக்கும்அனுபவங்கள், உணா்வுகள்அனைத்துமேஎளிதில்கடந்துசெல்லக்கூடியவைஅல்ல. அவைநம்முள்ஏற்படுத்தும்தாக்கம், பாதிப்பு, உரையாடல்எல்லாம்ஏதோஒன்றைநமக்குக்கற்றுத்தருகின்றன. இமையம்எழுதியஒன்பதுசிறுகதைகளையும்வாசிக்கும்போதுவாசகனின்மனதில்ஆழமானபாதிப்பையும், கற்றலையும்நிகழ்த்திவிட்டுச்செல்கின்றன. இமையத்தின்எழுத்தில்இருக்கின்றஎளிமை, தெளிவானஎண்ணஓட்டம், சொல்சிக்கனம், பழகுமொழி, உணா்வுகளைசாரம்குறையாமல்பதிவுசெய்யும்பாங்கு, காட்சிப்படுத்தும்ஆற்றல்ஆகியவைவாசகரைஎளிதில்வசீகரம்செய்துகதைநடந்தஇடத்திற்கேநம்மைஅழைத்துச்சென்றுவிடுகின்றன. கதையைவாசித்துமுடித்தபிறகும்கதாபாத்திரங்கள்நம்மைத்தொடா்ந்துவந்துதொந்தரவுசெய்கிறார்கள்.
சாதியின்பெயரால்வரும்இழிவு, அவமானம், வலி,
சாவு, இழப்பு, வெற்றுகௌரவம்எப்படிஎல்லாத்தளங்களிலும்ஊடுருவிச்செல்கின்றனஎன்பதை‘நன்மாறன்கோட்டைக்கதை,’
‘போலீஸ்’ஆகியஇரண்டுகதைகள்அப்பட்டமாகஎடுத்துச்சொல்கின்றன. பொங்கல்சமயத்தில்நடத்தப்பட்டமாடுகளுக்கானஓட்டப்பந்தயத்தில்காலனிமாடுவெடிச்சத்தம்கேட்டுவேகமாகஓடிப்போய்ஊா்மாடுகளைக்கடந்துஎல்லைக்கோட்டைத்தொட்டுவிட்டது. ஒருதாழ்த்தப்பட்டசாதியைச்சோ்ந்தமாடுஎப்படிஓட்டப்பந்தயத்தில்ஜெயிக்கலாம்என்றவெறியில்ஊருக்குப்பொதுவில்வைத்துமாட்டையும், மாட்டுக்காரனையும்சுளுக்கியால்குத்திக்கொன்றகதைசாதியின்வன்மத்தைத்தோலுரித்துக்காட்டியுள்ளது. வெற்றிதோல்விஅறியாதமாடும்,
மாட்டின்உரிமையாளரும்ஏன்அகோரமாகக்கொல்லப்படவேண்டும்? அத்தகையமனிதாபிமானமற்றஊரில்உயிர்பிழைக்கவிரும்பாதமனைவிபிள்ளைகளைகளோடுநம்மால்பயணிக்கமுடிந்தது.
காவலா்பணியில்உள்ளவர்தலித்பிணத்தைப்பாடையில்தூக்கிச்சென்றதால்தீட்டுஏற்பட்டுவிட்டதாகப்பதறுகிறார். தன்னுடையகையைஅருவெறுப்பாகப்பார்க்கிறார். அந்தப்புகைப்படம்செய்தித்தாளில்வெளியானதால்தன்னுடையசாதியின்கௌரவம்அழிந்துவிட்டதாகக்கருதுகிறார். அதற்காகத்தன்னுடையவேலையைக்கூடராஜினாமாசெய்யவும்தயாராகஇருக்கிறார்என்றமனநிலையை“போலீஸ்“கதைவிளக்குகிறது. தீட்டுப்பாடையைத்தொட்டதாலா,சமூகத்தின்எண்ணத்தில்உள்ளஅழுக்குசிந்தனையைஉசுப்பிவிட்டதாலா? என்றகேள்வியைஇந்தக்கதைஎழுப்புகிறது.
ஆணாதிக்கசமூகத்தில்பிறந்து, அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும்காலமெல்லாம்சுமக்கும்ஒருபெண்உளவியல்ரீதியாகவும், உடல்ரீதியாகவும்சந்திக்கும்சவால்களைஎளிதில்எண்ணிவிடமுடியாது. அத்தனைதுன்பங்களையும்தாங்கிக்கொண்டுவிம்மல்களோடும், விசும்பல்களோடும்வாழ்க்கையைக்கொஞ்சம்கொஞ்சமாகநகா்த்தும்சாதுா்யம்எல்லாப்பெண்களுக்கும்இயல்பாய்அமைந்துவிடுவதில்லை. திருமணத்திற்காகவாங்கிவைத்திருந்தஇரண்டுபவுன்தங்கச்சங்கிலிகாணாமல்போய்விட்டது. அதைஇரண்டுமூன்றுநாட்களுக்குள்கண்டுபிடித்துவிடவேண்டும்என்றபதட்டத்தில்கொளஞ்சியப்பர்என்றதெய்வத்திற்கு“பிராதுமனு“எழுதுகிறார். கடைசிவரைதங்கச்சங்கிலிகிடைக்கும்என்றஉத்திரவாதம்இல்லாதஅவலத்தில்அவளுடையஉயிர்செத்துச்செத்துப்பிழைக்கிறது.
பேருந்தில்பயணித்துவேலைக்குச்செல்லும்பெண்ணுக்குதிடீரென்றுஎதிர்பாராதநேரத்தில்மாதவிடாய்ஏற்பட்டுவிட்டால், எத்தகையசங்கடங்களைசந்திப்பார்என்பதை“ஆலடிபஸ்“என்றகதைவிவரிக்கிறது. தனக்குஏற்பட்டஅசௌகரியத்தைசகபெண்களிடம்சொல்லமுடியாமலும், மற்றவா்கள்தன்னைப்புரிந்துகொள்ளவில்லையேஎன்றஎரிச்சலைக்கோபமாகவும்வெளிப்படுத்தும்பெண்ணின்இயல்பைஅருமையாகப்படம்பிடித்துக்காட்டுகிறது.
திருமணம்முடித்தஆண்,தன்னுடையமனைவிமற்றும்பிள்ளையைமறந்துவிட்டுக்குடிப்பதும், சின்னவீடுவைத்துக்கொள்வதும்நம்முடையசமூகத்தில்இயல்பாகநடக்கிறது. அதைக்கேள்விகேட்டால்அடியும்,
உதையும், அவமானமும்மனைவிக்குப்பரிசாகக்கிடைக்கின்றன. எவ்வளவுநாளைக்குத்தான்மனைவிபுருசனின்போக்கிரித்தனத்தைப்பொறுத்துக்கொள்வாள். அவனுக்குசரியானபாடம்புகட்டவிரும்பி, காவல்நிலையத்தில்உறவினா்கள்சூழ்ந்துநிற்க,“இந்தப் புள்ள உனக்கு பொறக்கல“ என்று அடித்துச் சொல்லிவிடுகிறார். ஆணின் ஆதிக்கத்தையும், வக்கிரத்தையும் அங்கீகரித்த சமூகத்திற்குப் பாடம் புகட்டவே இவன் ஆண்மையற்றவன் என்ற பட்டத்தைச் சூட்டிப் பழிவாங்குகிறார். ஒரு பெண்ணின் கோபம் தலைக்கு மேல் ஏறும்போது எதுவும் செய்வாள் என்பதற்கு “தலைக்கடன்“ என்ற கதை ஒரு நல்ல உதாரணம்.
அன்பு, காதல், காமம் எல்லாம் ஆண்-பெண் உறவில் இயல்பாய் வெளிப்படும் உணா்வுகள். தன்னுடைய அந்தரங்கமான உணா்வுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த உலகில் யாராவது ஒரு நபா் உண்டா என்றுதான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏங்குகிறார்கள். அப்படி ஒரு நபா் இயல்பாய் அமையும்போது, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஒழுங்குகளையும் விதிமுறைகளையும் மீறுவதற்குத் தயங்குவதில்லை. அந்தஸ்து, கௌரவம் கடந்து உறவை கொண்டாடத் துடிக்கும். ஆணின் மனதை இயல்பாய் எடுத்துரைக்கிறது. “பணியாரக்காரம்மா“ மற்றும் “சாந்தா“ என்ற இரண்டு கதைகள்.தன்னுடைய மனைவியோடு எந்த உறவிலும் ஈடுபடாத செட்டியார், பணக்காரன் என்ற கௌரவத்தையும் கடந்து தெருவில் பணியாரம் சுட்டு விற்கும் பெண்ணை காதலிக்கிறார். அவளோடு நெருக்கமாக இருக்க அவளின் வீட்டிற்கே வருகிறார். தன்னை நினைத்து மனைவியை மறந்த செட்டியாருக்கு தன்னை முழுமையா வழங்கவும் தயராக இருக்கிறாள். கடைசியில் அவன் கொடுத்த பணத்தையும் நகையையும் நிராகரித்து, அன்பு இதையெல்லாம் கடந்தது என்று நிரூபிக்கிறாள். பணியாரக்காரம்மா தன்னை முழுமையாக நம்பி சித்தாள் வேலைக்கு அனுப்பும் கணவனுக்கு விசுவாசமாய் இருக்கிறாள் என்பதை அழகாக விளக்குகிறது “சாந்தா“ என்ற கதை. ஒரு வீட்டு உரிமையாளா் உடல் இச்சைக்காக அன்றி வேறு எதற்காக ஒரு சாதாரண சித்தாள் வீட்டிற்கே வர முடியும்? தலையில் அடிபட்டதற்கு மருத்துவச் செலவு செய்ய பணம் கொடுக்க நினைத்தாலும் அதுவல்ல நோக்கம் என்பதை சாந்தா சரியாகப் புரிந்துகொண்டு, அவனுக்குப் பாடம் கற்பிக்கிறாள். “ஒரு பொம்பள வயித்த கழுவனுமின்னா அவளோட உடம்பக் காட்டித்தான் சம்பாதிக்கணுமா?“ என்று சாந்தா சொன்னது அவனுக்குக் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. இன்னொருவனின் மனைவி மீது ஆசைப்படும் எல்லா ஆண்களின் மீதும் வீசி எறியப்பட்ட கல்தான் அவளின் கூற்று.
“நம்மாளு”, “கட்சிக்காரன்” இரண்டு கதைகளும் அரசியல் தளத்தில் நடைபெறும் உண்மை எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன. கட்சி, பதவி, அதிகாரம் என்று வந்தால் உறவினரும், நண்பரும், ஏன் ஒரே சாதிக்காரன் கூட விரோதியாக மாறிவிடும் அவலம் அரசியலில் மட்டுமே உள்ளது என்பதை விளக்குகிறது “நம்மாளு“ கதை. ஒரே கட்சியில் போட்டியிடும் சக தோழனைத் தோற்கடிக்கத் தொண்டா்களை அழைத்துப் பேரம் பேசும் சூழ்ச்சி அந்தக் கதையில் இயல்பாய் வெளிப்படுகிறது. துரோகம் கட்சி அரசியலின் அடுத்த முகம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
பணம் ஒன்று மட்டுமே இன்றைக்கு அரசியல் செல்வாக்கைத் தீா்மானிக்கும் முக்கியமான காரணி என்பதை எடுத்துச் சொல்கிறது “கட்சிக்காரன்“ என்ற கதை. கட்சிக்காக காலமெல்லாம் உழைத்தாலும் அதிகாரப் போட்டி என்று வரும்போது பணம் உள்ளவனே எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கும் இன்றைய எதார்த்த நிலையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஏமாற்றம், வஞ்சகம், நூதனமான பழிவாங்குதல் எல்லாம் அரசியலில் நடைமுறையாகிப் போய்விட்டன. பணமுள்ளவன் மட்டுமே பிழைக்க முடியும். பணமில்லாதவன் உழைக்க மட்டுமே செய்ய வேண்டும் என்பதை நிரூபிக்கிறது இந்தக் கதை.
ஒட்டுமொத்தமாக இமையத்தின் இந்த ஒன்பது கதைகளும் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன. தான் வாழும் சமூகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதை அழுத்தமான காட்சி மொழியில் பதிவு செய்திருக்கிறார். கதைகளில் வரும் மாந்தா்கள் சமூகத்தில் உலாவரும் மனிதா்களின் இயல்பான உணா்வுகளை, ஆசைகளை, கனவுகளை, சபலங்களை, வக்கிரமும் வன்மமும் நிறைந்த மனநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் பயணிக்கிறார்கள். எங்கும் எதிலும் கதையாசிரியா் தன்னுடைய சொந்தக் கருத்துக்களையும் எண்ணங்களையும் புகுத்தவில்லை. வாசகன் எந்தக் கருத்தையும் எடுத்துக்கொள்ளவும், விட்டுவிடவும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது இமையத்தின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. நன்மாறன்கோட்டைக்கதைஎன்றசிறுகதைத்தொகுப்புஎல்லோரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நல்ல நுால்.
அ.இருதயராஜ்
உதவி பேராசிரியா்
காட்சி தகவலியல் துறை
இலயோலா கல்லூரி
சென்னை – 600 034.
காட்சி தகவலியல் துறை
இலயோலா கல்லூரி
சென்னை – 600 034.
9443864471, மின்னஞ்சல்-iruraj2020@gmail.com
உயிர்மை செப்டம்பர் 2019